\
கிரிக்கெட் ரசிகையான மூதாட்டி ‘சாருலதா’ காலமானார்

கிரிக்கெட் ரசிகையான மூதாட்டி ‘சாருலதா’ காலமானார்

கிரிக்கெட் ரசிகையான மூதாட்டி ‘சாருலதா’ காலமானார்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ரசிகையான சாருலதா பாட்டியின் இறப்புக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், பிசிசிஐ-யும் இரங்கல் தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தைச் சேர்ந்த 87 வயதான மூதாட்டி சாருலதா. கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, இந்திய அணி வீரர்களை இவர் மைதானத்திற்கு வந்து உற்சாகப்படுத்தினார். வீல் சேரில் அமர்ந்து குழல் ஊதி இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய சாருலதா பாட்டியை, கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அவரது இருக்கைக்கே சென்று சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

இதனால் உலக அளவில் பிரபலமானார் சாருலதா பாட்டி. இந்நிலையில் இவர் உடல்நலக் குறைவால் காலமானார். சாருலதா பாட்டி எப்போதும் இந்திய அணியின் நினைவிலிருந்து நீங்காமல் இருப்பார் என பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. இதேபோல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் சாருலதா பாட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com