8  இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு: பஞ்சாப் அரசு

8 இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு: பஞ்சாப் அரசு

8 இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு: பஞ்சாப் அரசு
Published on

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசளிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆடவர் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையே நடைபெற்றது. அதில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. சுமார் 41 ஆண்டுகள் கழித்து இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதே இதற்கு காரணம்.

இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியில் விளையாடிய 8 பஞ்சாப் மாநில வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்தது. இதனையடுத்து இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் உள்பட 7 பேரை கவுரவிக்கும்விதமாக இந்தப் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com