60 வருட கிரிக்கெட், 7 ஆயிரம் விக்கெட்: ஓய்வு பெறுகிறார் 85 வயது பவுலர்!

60 வருட கிரிக்கெட், 7 ஆயிரம் விக்கெட்: ஓய்வு பெறுகிறார் 85 வயது பவுலர்!

60 வருட கிரிக்கெட், 7 ஆயிரம் விக்கெட்: ஓய்வு பெறுகிறார் 85 வயது பவுலர்!
Published on

60 வருடமாக கிரிக்கெட் விளையாடி, 7 ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் அடுத்த வாரம் ஓய்வு பெறுகிறார்.

வெஸ்ட் இண்டீஸின் ஜமைக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் செசில் ரைட் (Cecil Wright). அந்நாட்டின் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களுடன் ஆடியவர். 1959-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு லான்கா ஷையர் லீக் போட்டியில் ஆடுவதற்காகச் சென்றார். பின் அங்கேயே தங்கி, கிரிக்கெட் வாழ்க்கையை தொடர முடிவு செய்தார். 

60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி 7 ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அவருக்கு இப்போது, 85 வயது. அடுத்த மாதம் 7- ஆம் தேதி நடைபெறும் ஸ்பிரிங்ஹெட் (Springhead ) அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி செசில் ரைட் கூறும்போது, ‘காயம் இல்லாமல் உடல் தகுதியை சரியாக கவனித்துக் கொண்டதுதான் இவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாடி வருவதற்கு காரணம். உணவைப் பொறுத்தவரை எதையும் சாப்பிடுவேன். ஆனால், அதிகமாக மது குடிக்க மாட்டேன். பீர் மட்டும் எப்போதாவது அருந்துவேன். பயிற்சி செய்யாமல் இருந்ததில்லை. வீட்டில் அமர்ந்து டி.வி பார்க்க மாட்டேன்’ என்கிறார், இந்த 85 வயது இளைஞர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com