பதானிற்கு பிறகு முதல் ஓவரிலேயே மெய்டன் ’Hat-Trick’ - 8 விக்கெட்டுகள் வீழ்த்திய உனாத்கட்!

பதானிற்கு பிறகு முதல் ஓவரிலேயே மெய்டன் ’Hat-Trick’ - 8 விக்கெட்டுகள் வீழ்த்திய உனாத்கட்!
பதானிற்கு பிறகு முதல் ஓவரிலேயே மெய்டன் ’Hat-Trick’ - 8 விக்கெட்டுகள் வீழ்த்திய உனாத்கட்!

ரஞ்சிக்கோப்பையில் தன்னுடைய முதல் போட்டியில் பங்கேற்று விளையாடி இருக்கும் உனாத்கட், டெல்லி அணிக்கு எதிராக வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இந்திய அணியில் 12 வருடங்களுக்கு பிறகு பங்குபெற்ற உனாத்கட், வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்குபெற்று விளையாடினார். 12 வருட காத்திருப்பிற்கு பிறகு இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் வங்கதேச அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தி, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட் போட்டிக்கான முதல் விக்கெட்டை கைப்பற்றினார் உனாத்கட். 2010ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகத்திற்கு பிறகு 2022ஆம் ஆண்டு தான் தன்னுடைய இரண்டாவது போட்டியை விளையாடி இருந்தார் உனாத்கட்.

முதல் ஓவரிலேயே ஹாட்-டிரிக் எடுத்த உனாத்கட்!

இந்நிலையில், வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்த சவுராஸ்டிரா அணியின் கேப்டனான ஜெயதேவ் உனாத்கட், இந்த வருட ரஞ்சிக்கோப்பை தொடரின் முதல் போட்டியாக டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பங்குபெற்று விளையாடினார். டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் சவுராஸ்டிரா அணியை பந்துவீச பணித்தது. போட்டியின் முதல் ஓவரை வீச வந்த கேப்டன் உனாத்கட், வீசிய முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் டாட்டாக மாற்ற, 4ஆவது, 5ஆவது மற்றும் 6ஆவது டெலிவரிகளில் டெல்லி அணியின் ஓப்பனர் மற்றும் அடுத்தடுத்து களமிறங்கிய 2 வீரர்களென மூன்று வீரர்களையும் அவுட்டாக்கி ஹாட்-டிரிக் எடுத்து அசத்தினார். டி சொரே, வி ராவல் மற்றும் இன்பார்ம் வீரரான யாஸ் துல் என மூன்று பேரையும் 3 டெலிவரியில் வெளியேற்றி சாதனை படைத்தார் உனாத்கட்.

டாப் ஆர்டர் பேட்டர்கள் 4 பேரும் டக்-அவுட்!

டெல்லி அணியின் டாப் ஆர்டர் வீரர்களான டி சொரே, ஆயுஸ் பதோனி, வி ராவல், கேப்டன் யாஸ் துல் என டாப் ஆர்டர் வீரர்களான 4 பேரும் டக் அவுட்டில் வெளியேறி மோசமான சாதனையை படைத்துள்ளனர்.

0 ரன்களுக்கு 3 விக்கெட்டிலிருந்து - 10 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள்

தொடர்ந்து இரண்டாவது ஓவரை வீச வந்த ஜிராக் ஜானி 4 ரன்களுக்கு 4ஆவது விக்கெட்டை வீழ்த்தி அசத்த, 3ஆவது ஓவரை வீசவந்த உனாத்கட் தன்னுடைய இரண்டாவது ஓவரிலும் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்ற, 9 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் தன்னுடைய மூன்றாவது ஓவரை வீச வந்த உனாத்கட், 3ஆவது ஓவரிலும் மற்றுமொரு விக்கெட்டை வீழ்த்த 10 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி.

8 விக்கெட்டுகளை வீழ்த்திய உனாத்கட்!

பின்னர் 8ஆவது மற்றும் 9ஆவது விக்கெட்டுகளுக்கு களமிறங்கிய ரிதிக் மற்றும் சிவாங்க் இருவரும் டெல்லி அணிக்கு பொறுப்பாக விளையாடி டெல்லி அணிக்கு கொஞ்சம் ரன்களை சேர்க்க, 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றிய சவுராஸ்டிரா அணியின் கேப்டன் உனாத்கட், 39 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி ரஞ்சிக்கோப்பை தொடரில் தன்னுடைய சிறப்பான பவுலிங்க் ரெக்கார்டை பதிவு செய்தார்.

முதல் வீரராக ஹாட்-டிரிக் எடுத்து சாதனை!

முதல் ஓவரிலேயே பவுல்ட், விக்கெட் கீப்பர் கேட்ச், லெக்-பை விக்கெட் என ஹாட்-டிரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய உனாத் கட் முதலாவது ஓவரிலேயே இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் ரஞ்சிக்கோப்பையில் முதல் ஓவர் ஹாட்-டிரிக் எனப்படுவது கர்நாடகா அணியை சேர்ந்த வினய் குமார் வீசிய முதல் ஓவர் மற்றும் மூன்றாவது ஓவரையும் சேர்த்து கைப்பற்றிய ஹாட்-டிரிக் விக்கெட்டுகளே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதை உடைத்திருக்கிறார் உனாத்கட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com