தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய மகளிர் அணி

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய மகளிர் அணி
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய மகளிர் அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆண்கள், பெண்கள் அணிகள் ஒரே சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்ற நிலையில், மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வென்றது. 4வது போட்டி மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி கேப் டவுன் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீராங்கனைகள் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தனர். விக்கெட் கீப்பர் மித்தாலி ராஜ் 50 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். ரோட்ரிகியுஸ் 44 ரன்கள் எடுத்தார். 

இதனையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு தென்னாப்பிரிக்கா வீராங்கனைகள் விளையாடினர். இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தது. அந்த அணி 18 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. 

தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் 30 மேல் யாரும் அடிக்கவில்லை. இந்திய அணி தரப்பில் ஷிக்கா பாண்டே, ருமேலி தார், ராஜேஸ்வரி காயக்வாத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. 62 ரன்கள் குவித்த மித்தாலி ராஜ் ஆட்ட நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com