18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது

18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து 572 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

18 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பங் நகரங்களில் இன்று முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டு இரண்டு நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

தடகளம், வில்வித்தை, டென்னிஸ், பேட்மின்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, ஹாக்கி உள்பட 40 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

இந்தியாவில் இருந்து 572 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். இவர்கள் 36 போட்டிகளில் பங்கேற்கிறார்கள். கடந்த முறை இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களை பெற்றது. இந்த முறை கூடுதலாக பதக்கங்களை வெல்வோம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

(ஜகர்தா ஸ்டேடியம்)

முதல் நாளான இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது. தொடக்க விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் நடக்கி றது. தொடக்க விழாவில் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்கிறார்கள். இந்திய குழுவுக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசிய கொடி ஏந்தி தலைமை தாங்கி செல்கிறார். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு விழா தொடங்குகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com