தலைகீழாக தொங்கியபடி 13 நிமிடத்தில் 111அம்புகள் எய்த 5 வயது சிறுமி சஞ்சனா: உலகசாதனை முயற்சி

தலைகீழாக தொங்கியபடி 13 நிமிடத்தில் 111அம்புகள் எய்த 5 வயது சிறுமி சஞ்சனா: உலகசாதனை முயற்சி

தலைகீழாக தொங்கியபடி 13 நிமிடத்தில் 111அம்புகள் எய்த 5 வயது சிறுமி சஞ்சனா: உலகசாதனை முயற்சி

தலைகீழாக தொங்கியபடி 13 நிமிடத்தில் 111 அம்புகள் எறிந்த, சென்னையை சேர்ந்த 5 வயது சிறுமி சஞ்சனாவின் செயல் கின்னஸ் உலக சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சஞ்சனா என்ற ஐந்து வயது சிறுமி சனிக்கிழமையன்று தலைகீழாக தொங்கிய நிலையில், வெறும் 13 நிமிடங்களில் 111 அம்புகளை எய்து உலகசாதனை படைத்தார். இது குறித்து பேசிய வில்வித்தை பயிற்சியாளர் சிகான் ஹுசைனி "பயிற்சி பெற்ற வில்லாளர்கள்கூட நான்கு நிமிடங்களில் ஆறு அம்புகளைத்தான் வீசுகிறார்கள், அதாவது 20 நிமிடங்களில் 30 அம்புகள் மட்டுமே எய்தலாம். ஆனால் சஞ்சனா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்" என்று கூறினார். மேலும் "இச்சாதனையை நாங்கள் சரிபார்ப்புக்காக கின்னஸுக்கு அனுப்பப் போகிறோம்," என்றும் கூறினார்.

 “10 வயதுக்கு பிறகு சஞ்சனாவுக்கு ஒலிம்பிக் அம்பு எறிதலுக்கான பயிற்சியை தொடங்கவுள்ளோம். நிச்சயமாக எதிர்காலத்தில் என் மகள் நம் நாட்டிற்காக பல பதக்கங்களை பெற்றுத்தருவார்” என்று சஞ்சனாவின் தந்தை கூறுகிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com