ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
Published on

ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐந்து பேரை மும்பை குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.

மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது சிலர் சூதா‌ட்டத்தில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலை அடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 44 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு லேப்டாப், 9 மொபைல் ஃபோன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவலர்கள் 5 பேரை கைது செய்தனர். இதேபோல், பெங்களூருவில் மூன்று இடங்களில் நடைபெற்ற சோதனையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கம், 6 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com