விளையாட்டு
4வது டெஸ்ட்: விராட் கோலி விளையாடுவது சந்தேகம்
4வது டெஸ்ட்: விராட் கோலி விளையாடுவது சந்தேகம்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது.
இப்போட்டியில் 100 சதவிதிகம் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாடுவேன் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 3ஆவது டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.