ராகுல், தவான் அவுட்: இங்கிலாந்து மிரட்டல்!

ராகுல், தவான் அவுட்: இங்கிலாந்து மிரட்டல்!

ராகுல், தவான் அவுட்: இங்கிலாந்து மிரட்டல்!
Published on

நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்ட மிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னில் இஷாந்த் சர்மா வேகத்தில் வீழ்ந்தார். பேர்ஸ்டோவை 6 ரன்னில் பும்ரா வெளி யேற்ற, குக்கை 17 ரன்னில் பாண்ட்யா அவுட் ஆக்கினார்.

அதே போல், முந்தைய போட்டியில் இந்திய அணியை மிரட்டிய ஸ்டோக்ஸ், பட்லர் ஜோடியை முகமது ஷமி வெளியேற்றினார். இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால், அந்த அணி 120 ரன்னுக்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொயின் அலி, கர்ரன் ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. அந்த அணி 167 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் மொயின் அலி 40 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், ரஷித், முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இங்கிலாந்து அணி 70 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்தது. பின்னர் பிராட் 17 ரன்னில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய கர்ரன் 78 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 246 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். 

இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தது. தவானும் 3 ரன்களுடனும் கே.எல்.ராகுலும் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. அணியின் ஸ்கோர் 37 ஆக இருந்த போது, பிராட் வேகத்தில் எல்பிடபிள்யூ ஆனார் கே.எல்.ராகுல். அவர் 19 ரன்கள் எடுத்தார். அடுத்து புஜாரா வந்தார். அவரும் தவானும் நிதானமாக ஆடி வந்தனர். 17.5 ஓவரில், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிராட் வீசிய பந்தை அடிக்க முயற்சித்த தவான், பட்லரால் கேட்ச் செய்யப்பட்டார். அவர் 23 ரன்களில் பெவிலியன் திரும்ப, கேப்டன் கோலி வந்தார். அவரும் புஜாராவும் நிதானமாக ஆடிவருகின்றனர். 26.2 ஓவர்களில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கோலி 19 ரன்களுடன் புஜாரா 25 ரன்களுடன் ஆடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com