உலகக் கோப்பை கிரிக்கெட் ! கவுண்ட்டவுன் தொடங்கியது

உலகக் கோப்பை கிரிக்கெட் ! கவுண்ட்டவுன் தொடங்கியது
உலகக் கோப்பை கிரிக்கெட் ! கவுண்ட்டவுன் தொடங்கியது

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மே 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான கவுண்ட்டவுனை ஐசிசி நேற்று தொடங்கியுள்ளது. இன்னும் 365 நாளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்கம் என தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டது ஐசிசி.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ஆஅம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி முதல் ஜூலை மாதம் 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 16-ம் தேதி ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடக்கிறது. மேலும் கிரிக்கெட் உலகக் கோப்பையை கொண்டாடும் வகையில் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள வீடியோ இசை ஆல்பத்தையும் வெளியிட்டு, அசத்தியுள்ளது.

மிக முக்கியமாக கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் கட்டணத் விவரங்களையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. இப்போது தொடங்கியுள்ள டிக்கெட் விற்பனை ஜூன் 1-ம் தேதியுடன் முடிவடைகிறது. முதற்கட்ட விற்பனையின் போது விற்கப்படாத டிக்கெட்டுகள் செப்டம்பர் மாதம் மீண்டும் விற்பனை செய்யப்படும். ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ தகவல்கள் படி லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1,850 முதல் ரூ.4,600 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட்டுகளை www.cricketworldcup.com என்ற இணையதளத்தின் வாயிலாக பெற முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com