\
35-வது மாநில ஜூனியர் தடகள போட்டி: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை

35-வது மாநில ஜூனியர் தடகள போட்டி: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை

35-வது மாநில ஜூனியர் தடகள போட்டி: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை
Published on: 

நத்தத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தடகள சங்கத்தின் 35-வது மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தட்டிச்சென்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் 35 வது மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இறுதி நாளான இன்று 361 புள்ளிகள் பெற்று சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

கோயம்புத்தூர் அணி 266 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநில தடகள சங்க துணைத்தலைவர் கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ அன்பழகன் மற்றும் நத்தம் அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பரிசுக் கோப்பைகளை வழங்கினர். போட்டியில் மாநில தடகள சங்கச் செயலாளர் லதா இணைச்செயலாளர் உஸ்மான், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com