மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 3 கிரிக்கெட் வீரர்கள் சஸ்பெண்ட்!
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஹாங்காங் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஹாங்காங் கிரிக்கெட் அணி, சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளை யாடியது. இந்த அணியில் இடம் பெற்றிருந்தவர் பந்துவீச்சாளர் நதீம். இவர் மற்றும் இர்பான் அகமது, ஹசீப் அம்ஜத் ஆகிய மூன்று ஹாங்காங் வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
(இர்பான்)
இதில் இர்பான், ஸ்காட்லாந்துக்கு எதிராக கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தொடரின் போது பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று புகார் கூறப்பட்டது. இதனால் 2016 ஆம் ஆண்டில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஹசீப், நதீம் ஆகியோரும் அந்த தொடரில் பிக்சிங் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததை அடுத்து இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள் இரண்டு வாரத்துக்குள் தங்கள் விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று பேரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

