தென்னாப்பிரிக்கா பேட்டிங்: இந்திய அணியில் தவான், புவி, சஹா நீக்கம்!

தென்னாப்பிரிக்கா பேட்டிங்: இந்திய அணியில் தவான், புவி, சஹா நீக்கம்!

தென்னாப்பிரிக்கா பேட்டிங்: இந்திய அணியில் தவான், புவி, சஹா நீக்கம்!

தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தவான், புவனேஷ்வர்குமார், விக்கெட் கீப்பர் சஹா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாபமாகத் தோற்றது.   இரண்டாவது டெஸ்ட் போட்டி, செஞ்சுரியனில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளிசிஸ் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். 

தென்னாப்பிரிக்க அணியில் காயம் காரணமாக விலகிய ஸ்டெயினுக்குப் பதிலாக, அறிமுக வீரர் நிகிடி களமிறங்கியுள்ளார். இந்திய அணியில் தவானுக்குப் பதிலாக கே.எல்.ராகுலும் விக்கெட் கீப்பர் சஹாவுக்கு பதிலாக பார்த்திவ் பட்டேலும், புவனேஷ்வர்குமாருக்குப் பதில் இஷாந்த் சர்மாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்திய அணி விவரம்:
விராத் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பார்த்திவ் பட்டேல், அஸ்வின், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com