நியூசிலாந்துக்கு எதிரான 2ஆது டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்! பண்ட்-இஷான் கிஷன் ஓபனிங்!

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆது டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்! பண்ட்-இஷான் கிஷன் ஓபனிங்!
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆது டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்! பண்ட்-இஷான் கிஷன் ஓபனிங்!

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ்வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பவுலிங் தேர்வு.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் முதலில் டி20 தொடர் தொடங்கப்பட்டு முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி இன்று பே ஒவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இளம் வீரர்களை மட்டுமே கொண்டு களமிறங்குகிறது இந்திய அணி. இந்திய அணியை பொறுத்தவரை நியூசிலாந்து அணியே ஸ்டிராங்கான அணியாக திகழ்கிறது. இந்நிலையில் இளம் இந்திய அணி எப்படி தங்களை வெளிக்கொணர போகிறது என்ற சுவாரசியம் எழுந்துள்ளது. இளம் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துகொள்ள வேண்டும்.

இந்திய அணியின் 11 வீரர்கள் : இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (வி.கீ), சூரியகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து அணியின் 11 வீரர்கள்: ஃபின் ஆலன், டெவான் கான்வே(வி.கீ), கேன் வில்லியம்சன்(கேப்டன்), க்லென் பிலிப்ஸ், டேரில் மிட்சல், ஜேம்ஸ் நீஷம், இஷ் ஷோதி, டிம் சவுத்தீ, ஆடம் மில்னே, லாக்கி பெர்குஷன்.

முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஓபனிங் களமிறங்கி ஆடிவருகின்றனர். 4 ஓவர் முடிவில் 30/0 என்று ஆடி வருகிறது இந்திய அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com