2-வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சு தேர்வு

2-வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சு தேர்வு

2-வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சு தேர்வு
Published on

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட, டி20 தொடரை ஆஸ்தி ரேலிய அணி கைப்பற்றியது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒரு நாள் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது.

முதலாவது போட்டியில், ரன் கணக்கை தொடங்காமலேயே தவான் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 37 ரன்னிலும் கேப்டன் கோலி 44 ரன்னிலும் ராயுடு 13 ரன்னிலும் ஆட்டமிழந்து 99 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறிக்கொண்டிந்தது, இந்திய அணி. அப்போது இறங்கிய அனுபவ வீரர் தோனியும், கேதர் ஜாதவும் நிதானமாக ஆடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். தோனி 59 ரன்னும் ஜாதவ் 81 ரன்னும் எடுத்தனர். இந்த ஜோடி, 5-வது விக்கெட்டுக்கு 141 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியிலும் அவர்கள் ஜொலிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கும். இதற்காக அந்த அணியில் மாற்றங்கள் இருக்கும் என கூறப்பட்டது. அதன்படி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் ஆரோன் பின்ச் ஃபார்ம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. கடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அவர் அடிக்கவில்லை. அவர் சிறப்பாக ஆடும்பட்சத்தில், இந்திய அணிக்கு சவால் கொடுக்க முடியும். 

இந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் மாற்றமில்லை. கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே இந்தப் போட்டியிலும் விளை யாடுகிறார்கள். ஆஸ்திரேலிய அணியில், ஆஷ்டன் டர்னர், பேரண்ட்டோர்ப் ஆகியோருக்குப் பதிலாக, ஷான் மார்ஷ், சுழல் பந்துவீச்சாளர் லியான் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்:

இந்தியா: 
தவான், ரோகித் சர்மா, விராத் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா.

ஆஸ்திரேலியா: 
உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், ஸ்டோயினிஸ், ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், அலெக்ஸ் காரி, கோல்டர்-நைல், பேட் கம்மின்ஸ், லியான், ஆடம் ஜம்பா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com