26 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்பதில் சிக்கல்?

26 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்பதில் சிக்கல்?
26 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்பதில் சிக்கல்?

கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், குயிண்டன் டி காக், ககிசோ ரபாடா உள்ளிட்ட 26 வெளிநாட்டு வீரர்கள் இந்த ஐபிஎல் சீசனின் துவக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஐபிஎல் சீசன் இன்னும் 15 நாட்களுக்குள் துவங்க உள்ளது. ஆனால் அதே வேளையில் பல சர்வதேச போட்டிகள் ஏற்கனவே
திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்த நாடுகளின் வாரியங்கள் தங்கள் வீரர்களை சர்வதேச போட்டிகளை தவிர்த்துவிட்டு ஐபிஎல்லில் பங்கேற்க அனுமதிக்காது. இதனால் துவக்க ஆட்டங்களில் பல ஐபிஎல் அணிகள் தங்கள் சிறந்த சர்வதேச நட்சத்திரங்களை இழக்க நேரிடும் என்பதால், அந்த அணிகள் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

வெளிநாட்டு நட்சத்திரங்கள் ஐபிஎல்லில் பங்கேற்பதை சீர்குலைக்கும் மூன்று சர்வதேச தொடர்கள்:

வெஸ்ட் இண்டீஸ் Vs இங்கிலாந்து: இங்கிலாந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் கடைசி போட்டி மார்ச் 28-ம் தேதி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. டெஸ்ட் தொடர் மார்ச் 25-ம் தேதி முடிவடையும். சுற்றுப்பயணம் ஏப்ரல் 5-ம் தேதியுடன் முடிவடையும்.

தென்னாப்பிரிக்கா Vs பங்களாதேஷ்: தென்னாப்பிரிக்கா வங்கதேசத்திற்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஒருநாள் தொடர் மார்ச் 23ஆம் தேதியும், டெஸ்ட் தொடர் ஏப்ரல் 12ஆம் தேதியும் முடிவடைகிறது.

ஐபிஎல்லின் துவங்க ஆட்டங்களில் பங்கேற்பதில் சிக்கல் உள்ள சிறந்த வெளிநாட்டு வீரர்கள்:

ஜோஃப்ரா ஆர்ச்சர், பாட் கம்மின்ஸ், ஆரோன் ஃபின்ச், ரஸ்ஸி வான் டெர் டுசென், மார்கோ ஜான்சன், சீன் அபோட், ஐடன் மார்க்ரம், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், அன்ரிச் நார்ட்ஜே , டுவைன் பிரிட்டோரியஸ், ரஹ்மான், லுங்கி என்கிடி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், ஜானி பேர்ஸ்டோ, ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ், மார்க் வூட், குயின்டன் டி காக், டேவிட் மில்லர், அல்ஸாரி ஜோசப்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com