2022ம் ஆண்டிற்கான ஐசிசி ஆடவர், பெண்கள் அணி.. ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்!

2022ம் ஆண்டிற்கான ஐசிசி ஆடவர், பெண்கள் அணி.. ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்!
2022ம் ஆண்டிற்கான ஐசிசி ஆடவர், பெண்கள் அணி.. ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்!

2022ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களை கொண்ட அணியை, ஐசிசி இன்று அறிவித்துள்ளது. டி20 வீரர்களுக்கான அந்த அணியின் பட்டியலில் ஆடவர் அணியில் 3 இந்திய வீரர்களும், மகளிர் அணியில் 4 வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர்.

அதன்படி, ஐசிசி கனவு அணியின் கேப்டனாக இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இடம்பிடித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 கனவு அணி:

1.ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர், இங்கிலாந்து),

2.முகம்மது ரிஸ்வான் (பாகிஸ்தான்),

3.விராட் கோலி (இந்தியா),

4.சூர்யகுமார் யாதவ் (இந்தியா),

5.க்ளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து),

6.சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே),

7.ஹர்திக் பாண்டியா (இந்தியா),

8.சாம் கர்ரன்,

9.வன்னிடு ஹசரங்கா (இலங்கை),

10.ஹாரிஸ் ராஃப் (பாகிஸ்தான்),

11.ஜோஸ் லிட்டில் (அயர்லாந்து)

அதுபோல், மகளிருக்கான கனவு டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 4 இந்திய வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். அந்தப் பட்டியலில் நியூசிலாந்து அணி வீராங்கனை சோபி டெவின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு அடுத்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் கனவு அணி:

1. ஸ்மிருதி மந்தனா (இந்தியா),

2. பெத் மூனி (ஆஸ்திரேலியா),

3. சோபி டெவின் (நியூசிலாந்து),

4. ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா),

5. தஹ்லியா மெக்ராத் (ஆஸ்திரேலியா),

6. நிடா தர் (பாகிஸ்தான்),

7. தீப்தி சர்மா (இந்தியா),

8. ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர், இந்தியா),

9. சோபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து),

10. இனோகா ரணவீரா (இலங்கை)

11. ரேணுகா சிங் (இந்தியா).

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com