ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி
Published on

வங்கதேச நாட்டில் நடைபெற்று வரும் 2021 ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பைக்கான தொடரின், முதல் சுற்றில் பாகிஸ்தான் ஹாக்கி அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. 

இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி, இரண்டு வெற்றி மற்றும் ஒரு டிரா என புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. வரும் ஞாயிறு அன்று ஜப்பான் நாட்டை எதிர்கொள்கிறது இந்தியா. கடந்த 2018-இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது. மழை காரணமாக 2018-இல் அந்த போட்டி கைவிடப்பட்டது. 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் இரண்டு கோல்களை பதிவு செய்தார். நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். மொத்தம் நான்கு கோல்களை இந்த தொடரில் அவர் பதிவு செய்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com