\
பெல்ஜியத்தை வீழ்த்துமா பிரேசில் ? நாளை முதல் காலிறுதி

பெல்ஜியத்தை வீழ்த்துமா பிரேசில் ? நாளை முதல் காலிறுதி

பெல்ஜியத்தை வீழ்த்துமா பிரேசில் ? நாளை முதல் காலிறுதி
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நாளை முதல் தொடங்குகிறது. 

இதற்காக பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அர்ஜென்டினாவை வீழ்த்திய பிரான்ஸ் அணியினர் , வெற்றியைத் தொடரும் வேட்கையுடன் ஆயத்தமாகி ‌வருகின்றனர். பிரான்ஸ் அணி நாளை நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணியை எதிர்கொள்கிறது. 

அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மற்றொரு காலிறுதியில் உலகத் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள பிரேசில் அணியுடன், தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்கா‌க பெல்ஜியம் மற்றும் பிரேசில் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரேசில் அணிக்கு எதிரான காலிறுதியை‌ , இறுதிப்போட்டியைப் போன்று கருதுவதாக பெல்ஜியம் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் வின்சென்ட் கோம்பானி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com