விளையாட்டு
கொல்கத்தாவில் மழை: முதல் டெஸ்ட் தொடங்குவதில் தாமதம்
கொல்கத்தாவில் மழை: முதல் டெஸ்ட் தொடங்குவதில் தாமதம்
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று காலை தொடங்குவதாக இருந்தது. அங்கு பெய்து வரும் மழை காரணமாக வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.
இதையடுத்து மைதானம் பாதுகாப்பாக மூடப்பட்டது. இந்நிலையில் இன்று காலையும் மழை தொடர்ந்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் டாஸ் போடாத நிலையில் வீரர்களும் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.