ஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டி20 போட்டி நாளை நடக்கிறது. விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை நாளை எதிர்கொள்கிறது. இதற்கான 12 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், குணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது, சேஹல்.
இந்த தொடரைத் தொடர்ந்து, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் மூன்று ஒரு நாள் போட்டித் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது.