‘சிக்ஸர் மழை’ - புதிய மைல்கல்லை எட்டினார் தோனி

‘சிக்ஸர் மழை’ - புதிய மைல்கல்லை எட்டினார் தோனி

‘சிக்ஸர் மழை’ - புதிய மைல்கல்லை எட்டினார் தோனி
Published on

இந்திய அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. விராட் கோலி 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கே.எல்.ராகுல் 47, தோனி 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இந்தப் போட்டியில் விராட் கோலியும், தோனியும் ஜோடி சேர்ந்து 49 பந்துகளில் 100 ரன்கள் குவித்தனர். இருவரும் போட்டி போட்டு சிக்ஸர் மழை பொழிந்தனர். இது இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. விராட் கோலி 6, தோனி 3 சிக்ஸர்கள் விளாசினர். ஏற்கனவே கே.எல்.ராகுல் 4 சிக்ஸர்கள் அடித்து இருந்தனர். 

இந்தப் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் முதல் இந்திய வீரராக சர்வதேசப் போட்டிகளில் 350 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற மைல்கல்லை தோனி எட்டியுள்ளார். அதேபோல், டி20 போட்டியில் 50 சிக்ஸர்களை கடந்துள்ளார். விராட் கோலியும் 6 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் கோலியும் டி20யில் 50 சிக்ஸர்களை எட்டியுள்ளார். 

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் தோனி 37 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். ரன்கள் அடித்த சிரமப்பட்டார். நிறைய பந்துகளில் ரன் எதுவும் அடிக்கவில்லை. அதனால், தோனி மீது கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்பட்டது. கடைசி 10 ஓவர்களில் இரு அணியின் வீரர்களும் ரன்கள் அடிக்க தடுமாறிய நிலையில், தோனி மீது நீண்ட நேரம் களத்தில் இருந்து ரன் அடிக்கவில்லை என்று கூறப்பட்டது. 

இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு சிக்ஸர்கள் விளாசி தோனி பதிலடி கொடுத்துள்ளார். அதுவும், தோனி இன்றைய போட்டியுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அந்த நிலையில், தோனியின் இன்றைய ஆட்டம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com