விளையாட்டு
இத்தாலியன் ஓபன்: மகளிர் பிரிவில் இகா ஸ்வியாடெக், ஆடவர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன்
இத்தாலியன் ஓபன்: மகளிர் பிரிவில் இகா ஸ்வியாடெக், ஆடவர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன்
இத்தாலியன் பன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் செக் குடியரசின் கரொலின் பிளிஸ்கோவாவை 6-0, 6-0 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் போலாந்தை சேர்ந்த 19 வயதேயான இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக்.
முதல் முறையாக அவர் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றுள்ளார். 46 நிமிடங்களில் இந்த வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியனாகவும் இகா ஸ்வியாடெக் உள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் ஜோகோவிச்சை 7-5, 1-6 மற்றும் 6-3 என்ற கணக்கில் வென்றார் ரபேல் நடால். இது இத்தாலியன் ஓபன் ஒற்றையர் இறுதியில் அவர் வென்றுள்ள பத்தாவது சாம்பியன் பட்டமாகும்.