\
Priyansh Arya
Priyansh AryaANI

ஒரே இன்னிங்சில் 19 சிக்சர்கள்! பின் ஆலன் சாதனையை சமன் செய்த இந்திய வீரர்!

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 181 ரன்கள்! டெல்லி அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்.
Published on: 

செய்தியாளர் - M. மீரா

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பைத் தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா, ஒரே இன்னிங்சில் 19 சிக்சர்களை விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் நியூசிலாந்து வீரர் பின் ஆலனின் உலக சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.

இந்தத் தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் கேப்டனான பிரியான்ஷ் ஆர்யா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். வெறும் 68 பந்துகளில் 181 ரன்களைக் குவித்த அவர், இதில் 19 சிக்சர்கள், 7 பவுண்டரிகளை அடித்தார். வெறும் 18 பந்துகளில் அரைசதத்தையும், 36 பந்துகளில் சதத்தையும் எட்டினார்.

Priyansh Arya
Priyansh AryaANI

இதன் மூலம் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் பின் ஆலனுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய பின் ஆலன், வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிராக 19 சிக்சர்களை விளாசியிருந்தார்.

பிரியான்ஷ் ஆர்யாவின் அதிரடியால் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் டெல்லி அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும், சையத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் அதிக தனிநபர் ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் ஆர்யா பெற்றுள்ளார்.

Priyansh Arya
சுயசரிதையில் சீண்டிய கவாஜா... 15 ஆண்டுகால கோபத்தைக் கொட்டிய முன்னாள் கோச்!