சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: முதல் பரிசு வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: முதல் பரிசு வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: முதல் பரிசு வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

சாம்பியன் பட்டங்களை வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் முதல் முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது,கடந்த 12ஆம் தேதி முதல் சுற்று போட்டிகள் துவங்கிய நிலையில் இன்று மாலை ரசிகர்களின் படை சூழ கோலாகலமாக மாலை 5 மணிக்கு துவங்கியது.

இரட்டையர் பிரிவில் பிரிவில் லூயிசா ஸ்டேபானி,கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி இணை ஆனா லின்கோவா,நடிலா ஜலாமிட்ஸ் இணையை எதிர்த்து விளையாடினர் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்டேபானி - டப்ரோவ்ஸ்கி இணை 57 இடங்களில் 6-1,6-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் 17 வயதேயான லிண்டா ஃப்ருஹ்விர்டோவா - மக்டா லினெட்டே- வை எதிர்த்து விளையாடினார். இரண்டு வீராங்கனைகளுமே நல்ல பார்மில் இருந்ததால் ரசிகர்கள் கணித்தவாறு துவக்கம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது, இரண்டு வீராங்கனைகளும் முதல் செட்டில் கடுமையாக போராட 1 மணி நேரத்திற்கு மேல் முதல் செட் மட்டும் சென்றது. இறுதியில் 6-4 என்ற புள்ளி கணக்கில் மக்டா லினெட்டே முதல் சுற்றை கைப்பற்றினார்,இருப்பினும் அரை இறுதியில் எப்படி முதல் சுற்றில் தோல்வி அடைந்தாலும் பின்னர் லிண்டா கம்பேக் கொடுத்தாரோ அதே போல இரண்டாவது சுற்றில் ஆக்ரோஷமாக விளையாடி 6-3 என இரண்டாவது செட்டை கைப்பற்றினார்,இருப்பினும் இறுதி மற்றும் மூன்றாவது சுற்றில் ஒரு கட்டத்தில் மக்டா லினெட்டே முன்னிலையில் செல்ல மீண்டும் ஒருமுறை கம்பேக் கொடுத்து சர்வதேச WTA தொடரில் தன்னுடைய முதல் பட்டத்தை வென்றார் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா.

சென்னை ஓபன் தொடரில் பட்டம் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க காசோலைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

சென்னை ஓபன் தொடரின் துவக்கத்தில் ரசிகர்கள் இல்லாமல் கலை இழந்து துவங்கிய சென்னை ஓபன் தொடர் இறுதி போட்டியில் 80% மேல் ரசிகர்களின் படை சூழ முடிவடைந்தது.

இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் மெய்யநாதன்,  ,கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் எழிலன், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறுதி போட்டிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நேரடியாக போட்டியை கண்டு ரசித்தார். பின்னர் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதையும் படிக்க: 2023 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் புதிய TACTICAL SUBSTITUTE விதிமுறை -பிசிசிஐ திட்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com