\
168 ரன்கள் இலக்கு : இந்திய பவுலிங்கில் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்

168 ரன்கள் இலக்கு : இந்திய பவுலிங்கில் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்

168 ரன்கள் இலக்கு : இந்திய பவுலிங்கில் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 167 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஃபுளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 23 ரன்கள் எடுத்த நிலையில் தவான் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா அரை சதம் அடித்தார். பின்னர் 67 (51) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதைத்தொடர்ந்து வந்த ரிஷாப் 4 (5) ரன்களில் வெளியேறினார். கேப்டன் கோலி 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் ஆல்ரவுண்டர் குருனல் பாண்ட்யா 20 (13) ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் குவித்தது. தற்போது பேட்டிங் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஓவர்களில் 16 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com