"முக்கியமான நேரத்தில் கூலாக பதில் சொன்ன மெக்கல்லம்"- நினைவுகளை பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர்

"முக்கியமான நேரத்தில் கூலாக பதில் சொன்ன மெக்கல்லம்"- நினைவுகளை பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர்
"முக்கியமான நேரத்தில் கூலாக பதில் சொன்ன மெக்கல்லம்"- நினைவுகளை பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர்

2021 ஐபிஎல் தொடரில் நடந்த போட்டி ஒன்று குறித்து பேசியுள்ள இந்திய ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் அப்போதைய கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராய் இருந்த ப்ரெண்டன் மெக்கல்லம் பற்றி சில நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான ப்ரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராய் பதவி ஏற்றதிலிருந்தே பல அதிரடி வெற்றிகளை பதிவு செய்து வருகிறது இங்கிலாந்து அணி.

இந்தியா- இங்கிலாந்து, நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரில் முக்கியமான தருணத்திலும்கூட 350 முதல் 400 வரையிலான அதிகபட்ச இலக்கை போட்டியின் கடைசி இன்னிங்க்ஸில் அதிரடியாக ஆடி எதிரணியிடமிருந்து வெற்றியை பறித்து புதிய அணுகுமுறையை கையாண்டு வருகின்றனர் இங்கிலாந்து அணியினர். இந்த அணுகுமுறைக்கு “பாஸ்பால்” அணுகுமுறை என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. அந்த பெயர் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கல்லமிற்கு வழங்கப்பட்ட புனைபெயர் சார்ந்தே குறிப்பிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ப்ரெண்டம் மெக்கல்லம் 2021 ஐபில் போட்டி ஒன்றில், போட்டியின் முக்கியமான கட்டத்தில் செய்த அட்வைஸ் பற்றி பகிர்ந்துள்ளார் வெங்கேடஷ் ஐயர். அதில் “ கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 80 ரன்கள் தேவை என்ற இடத்தில் வீரர்களிடம் பேச வந்த தலைமை பயிற்சியாளர் மெக்கல்லம், ”இன்னும் 13 சிக்ஸர்கள்தான் தேவை, அந்த அணுகுமுறை தான் உங்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும்” என்று கூறியதாக தெரிவித்தார். மேலும் அவர் எந்த ஒரு வீரரையும் அழுத்தமான நிலையில் வைத்திருக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

2021 ஐபிஎல் இரண்டாம் பேஸ்ஸில் வெங்கடேஷ் ஐயரை களமிறக்கினார் தலைமை பயிற்சியாளர் ப்ரெண்டம் மெக்கல்லம். ஓப்பனிங்க் பேட்ஸ்மேனாக களமிறங்கி தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் 10 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும் வெங்கடேஷ் ஐயரின் சிறந்த ஆட்டத்தினால் ஃபைனல் வரை சென்றது கொல்கத்தா அணி. இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை வென்று 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி.

மேலும் தான் சந்தித்ததிலேயே மிகவும் நம்பிக்கை நிறைந்த ஒருவர் மெக்கல்லம்தான் என்று தெரிவித்த அவர், போட்டியின் எந்த சூழ்நிலையிலும் அவர் தைரியமான அணுகுமுறையை பின்பற்றுவார் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com