ஐபிஎல் ஏலத்தில் தீவிரம்காட்டும் வெ.இண்டீஸ், ஆஸ்தி. வீரர்கள்: மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
இந்தாண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1097 கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 57 வீரர்களை விடுவித்த நிலையில் ஐபிஎல் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் சென்னையில் முதல் முறையாக அதற்கான ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது.
இந்தாண்டு நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 18 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என தெரிவித்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை தவிர எந்தெந்த நாட்டில் இருந்து எவ்வளவு வீரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என் விவரமும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி ஆப்கானிஸ்தான் 30, ஆஸ்திரேலியா 42, பங்களாதேஷ் 5, இங்கிலாந்து 21, அயர்லாந்து 2,நேபாள் 8, நெதர்லாந்து 1, நியூசிலாந்து 29, ஸ்காட்லாந்து 7, தென் ஆப்பிரிக்கா 38, இலங்கை 31, ஐக்கிய அரபு அமீரகம் 9, அமெரிக்கா 2, வெஸ்ட் இண்டீஸ் 56, ஜிம்பாப்வே 2 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.