ஐபிஎல்-ல் கேப்டனாக 100வது வெற்றியை பதிவு செய்த தோனி

ஐபிஎல்-ல் கேப்டனாக 100வது வெற்றியை பதிவு செய்த தோனி
ஐபிஎல்-ல் கேப்டனாக 100வது வெற்றியை பதிவு செய்த தோனி

13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி, ஐபிஎல் தொடரில் கேப்டனாக தனது 100வது வெற்றியை தோனி பதிவு செய்தார்.

நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் மார்ச் மாதம் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸால் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது. அத்துடன் தோனி கடந்த ஒரு வருடமாக விளையாடமால் இருந்ததால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் தலைமையில் மும்பையை வீழ்த்தி வெற்றியை ருசித்தது.

இருப்பினும் தோனி ஏதேனும் சாதனை செய்வார், ரசிகர்களை கொண்டாட வைப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கேற்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தனது புதிய மைல்கல்லை எட்டினார். இன்றைய போட்டியில் 2 கேட்ச்களை தோனி பிடித்தார். அதன்மூலம் ஐபிஎல் போட்டிகள் 100 கேட்ச்கள் என்ற மைல்கல்லை அவர் அடைந்தார். அதுமட்டுமின்றி மும்பையை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக இருந்து தனது 100வது வெற்றியை தோனி பதிவு செய்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் டபுள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com