\
10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம்:  2-வது தங்கம் வென்றார் தமிழக வீரர் லட்சுமணன்

10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம்: 2-வது தங்கம் வென்றார் தமிழக வீரர் லட்சுமணன்

10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம்: 2-வது தங்கம் வென்றார் தமிழக வீரர் லட்சுமணன்
Published on

புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றார். ஆடவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சக வீரர் கோபியின் சவாலை முறியடித்து அவர் முதலிடம் பிடித்தார். டி.கோபி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். ஏற்கனவே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இதனையடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இவ்விரு பிரிவுகளிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். 2 தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்த லட்சுமணன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இரட்டை தங்கம் வென்ற லட்சுமணனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com