“ரன்னே கொடுக்காமல் 6 விக்கெட்டுகள்” - சாதனை படைத்த வீராங்கனை

“ரன்னே கொடுக்காமல் 6 விக்கெட்டுகள்” - சாதனை படைத்த வீராங்கனை
“ரன்னே கொடுக்காமல் 6 விக்கெட்டுகள்” - சாதனை படைத்த வீராங்கனை

ரன் ஏதும் விட்டுக் கொடுக்கமால் 6 விக்கெட்கள் வீழ்த்தி கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

நேபாள மகளிர் அணி மற்றும் மாலத்தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி இடையே தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகளின் 20 ஓவர் போட்டி ஒன்று இன்று நடைபெற்றது. இந்த இரண்டு அணிகளமே கத்துக் குட்டி அணி என்பதால் இந்த ஆட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எனினும் இந்தப் போட்டியில் வீராங்கனை ஒருவர் யாரும் எதிர்பார்க்காத சாதனை ஒன்றை படைத்து அனைவரின் கவனத்தையும் போட்டிக்கு ஈர்த்துள்ளார். 

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மாலத்தீவுகள் பெண்கள் அணி 11 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் ரன் ஏதும் விட்டு கொடுக்காமல் 2.1 ஓவர்கள் பந்துவீசி 6 விக்கெட்களை அள்ளினார். இதன்மூலம் மகளிர் டி20 போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்பு மாலத்தீவுகள் மகளிர் அணியின் வீராங்கனை மாஸ் எலிசா 3 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இந்தச் சாதனையை அஞ்சலி தற்போது முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள அணி வெற்றி பெற்றது. வெற்றி இலக்கான 17 ரன்களை வெறும் 5 பந்துகளிலேயே அடித்தனர்.

(அஞ்சலி சந்த்)

அண்மையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய வீரர் தீபக் சாஹர் சிறப்பாக பந்துவீசி 7 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இது ஆடவர் டி20 போட்டிகளில் செய்யப்பட்ட சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு முன்பு இலங்கை வீரர் அஜந்தா மெண்டீஸ் 8 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்த சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com