``நாங்க திரும்ப வருவோம்”- உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு பதிவிட்ட பிரான்ஸ் வீரர் எம்பாப்வே!

``நாங்க திரும்ப வருவோம்”- உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு பதிவிட்ட பிரான்ஸ் வீரர் எம்பாப்வே!
``நாங்க திரும்ப வருவோம்”- உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு பதிவிட்ட பிரான்ஸ் வீரர் எம்பாப்வே!

உலகின் தலைசிறந்த வீரரான மெஸ்ஸியின் `கனவு உலகக்கோப்பை'க்கு முன்னே, பெரிய எதிராளியாக மாறி முன்னின்ற 23 வயதே நிரம்பிய கிளியான் எம்பாப்வே, உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை சுவாரசியம் மிகுந்த திருவிழாவாகவே மாற்றினார்!

உலகக்கோப்பையின் மேல் வைத்த கையை விடாமல் பிடித்திருந்த எம்பாப்வே!

உலகின் தலைசிறந்த இறுதிப்போட்டியாக மாறியது நேற்று நடந்த கத்தார் கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. இறுதிப்போட்டியில் முதல் பாதியில் அர்ஜெண்டினா இரண்டு கோல்கள் அடித்த பிறகும், அதாவது 80 நிமிடங்கள் வரை போட்டி சென்ற பிறகும், உலகக்கோப்பையின் மீது வைத்திருந்த கையை எடுக்காமலே இருந்தார் பிரான்ஸ் நாட்டின் இளம் நட்சத்திர வீரர் எம்பாப்வே.

80, 81 என இரண்டே நிமிடங்களில் 2 கோல்களை அடித்து போட்டியை தலைகீழாக மாற்றிய எம்பாப்வே, மெஸ்ஸியின் உலகக்கோப்பை கனவிற்கு தடையாக நின்றார். போட்டியின் அடுத்த நிமிடங்களில் மெஸ்ஸி அடுத்த கோல் அடிக்க, மீண்டும் இன்னொரு கோலை பதிவு செய்த எம்பாப்வே பைனலை எப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பானதாக மாற்றினார்.

இந்த எம்பாப்வே கால்பந்து உலகக்கோப்பையில் செய்த சாதனைகள் இங்கே!

* 2018 - உலகக்கோப்பை வெற்றியாளர்

* 2022 - உலகக்கோப்பை இறுதிப் போட்டிவரை வந்தது

* 2022 கோல்டன் பூட் வெற்றியாளர்

* உலகக்கோப்பையில் 1966ற்கு பிறகு இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல்வீரர்.

* 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 2 கோல்களை அடித்த எம்பாப்வே, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரான்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு எடுத்து வந்தவர்.

* 2002 இல் ரொனால்டோவிற்குப் பிறகு ஒரு உலகக்கோப்பையில் 7+ கோல்களை அடித்த முதல் வீரர்.

* ஒரு உலகக்கோப்பையில் 23 வயது அல்லது அதற்கு குறைவான வயது கொண்டு, அதிக கோல்கள் அடித்த முதல் வீரர்.

* உலகக்கோப்பையில் 14 ஆட்டங்களில் விளையாடி, அதில் 12 உலகக் கோப்பை கோல்களை பதிவு செய்தவர்.

* உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவர் 6வது வீரராக உருவெடுத்துள்ளார்.

FGOAT என ஆருடம் செய்யும் கால்பந்து ரசிகர்கள்!

கால்பந்து விளையாட்டில் பீலே, மாரடோனா, குரைஃப், ரொனால்டினோ, டெவிட் பெக்காம் என்று எத்தனையோ ஜாம்பவான்களின் ஆட்டத்தை பார்த்திருப்போம். தற்போதைய மாடர்ன் ஜாம்பவன்களாக இருக்கும் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் “வருங்காலங்களில் கிளியான் எம்பாப்வே, வரலாறு படைக்கும் சிறந்த வீரராக உருவெடுப்பதை பார்ப்போம்” என்று கால்பந்து ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

”நாங்கள் திரும்ப வருவோம்”- இன்ஸ்டாவில் பதிவு செய்த எம்பாப்வே!

உலகக்கோப்பைக்காக இறுதிவரை போராடிய எம்பாப்வே, இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இன்ஸ்டாகிராம் பதிவில் “நாங்கள் திரும்ப வருவோம்” என்று தன்னுடைய கோல்டன் பூட் புகைப்படத்தை பதிவிட்டு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com