”இரட்டை சதங்கள்-அதிக 100'கள் அடிக்கும் வீரர்கள் கூட வரலாம்..ஆனால்”-தோனி குறித்து காம்பீர்

”இரட்டை சதங்கள்-அதிக 100'கள் அடிக்கும் வீரர்கள் கூட வரலாம்..ஆனால்”-தோனி குறித்து காம்பீர்
”இரட்டை சதங்கள்-அதிக 100'கள் அடிக்கும் வீரர்கள் கூட வரலாம்..ஆனால்”-தோனி குறித்து காம்பீர்

இந்தியா டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய அணியை விமர்சித்துள்ள முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை பாராட்டி பேசியுள்ளார்.

2022 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து அரையிறுதியோடு இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து, இந்திய அணி வெளியேறியது. 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன் தொடரை தோனி தலைமையில் வென்ற பிறகு, 9 வருடங்களாக எந்தவிதமான ஐசிசி தொடரிலும் இதுவரை இந்திய அணி கோப்பையை கைப்பற்றவில்லை.

இந்நிலையில் அரையிறுதி போட்டிக்கு பின்னர் இந்திய அணி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய தொடக்க வீரர் கவுதம் காம்பீர், 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றிகளின் அங்கமாக இருந்ததை நினைவுகூர்ந்து, ஐசிசி தொடர்களில் தனது முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் சாதனையைப் பாராட்டினார்.

பின்னர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தோனியோடு ஒப்பிட்டு பேசியிருக்கும் அவர், "யாராவது வந்து ரோஹித் சர்மாவை விட அதிக இரட்டை சதங்களும், விராட் கோலியை விட அதிக சதங்களும் அடிப்பார்கள், ஆனால் எந்த இந்திய கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை அடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

இந்திய கேப்டனாக முதல் முயற்சிலேயே டி20 உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற தோனி, கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக இருந்து மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார். அவரது தலைமையின் கீழ், டி20 உலகக் கோப்பையின் முதல் பதிப்பில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 3 ஐசிசி கோப்பைகளை வென்ற சாதனையை தோனி தன்வசப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com