\
"கிரிக்கெட் உலகின் ஒரே கேப்டன் தோனி"- அமைச்சர் வேலுமணி ட்வீட்

"கிரிக்கெட் உலகின் ஒரே கேப்டன் தோனி"- அமைச்சர் வேலுமணி ட்வீட்

"கிரிக்கெட் உலகின் ஒரே கேப்டன் தோனி"- அமைச்சர் வேலுமணி ட்வீட்
Published on

கிரிக்கெட் உலகத்தின் ஒரே கேப்டன் தோனி என்று தமிழக ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய கிரிக்கெட் அணியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தார். இதனை அவரது ரசிகர்கள் #15YearsOfDhonism என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். தற்போதுள்ள இந்திய அணியில் தோனி இல்லை. உலகக் கோப்பை முடிந்தபோது, சென்ற அவர் இன்னும் அணிக்கு திரும்பவில்லை. இதில் பல உள் அரசியல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தோனி அணியில் இல்லாவிட்டாலும், அவரது ரசிகர்கள் இன்னும் அவரை கொண்டாடத் தவறவில்லை.

இந்நிலையில் தமிழக ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் " இரண்டு விதமான கிரிக்கெட் உலகக் கோப்பை ஒரு சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற உலகின் ஒரே கேப்டன் தோனி. கிரிக்கெட் உலகின் "தல"யை நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்போம், அவர் கிரிக்கெட் உலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். வாழ்த்துகள் கேப்டன் கூல்" என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com