’என் உயிர் மீது சத்தியம்! அது உண்மையல்ல’ - கெஞ்சிய கிளார்க்! பளார் பளார் என அறைந்த காதலி!

’என் உயிர் மீது சத்தியம்! அது உண்மையல்ல’ - கெஞ்சிய கிளார்க்! பளார் பளார் என அறைந்த காதலி!
’என் உயிர் மீது சத்தியம்! அது உண்மையல்ல’ - கெஞ்சிய கிளார்க்! பளார் பளார் என அறைந்த காதலி!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், மோசடி குற்றச்சாட்டுகளுக்காக தனது காதலியால் பலமுறை அறையப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் மீது அவரது காதலி துரோகம் செய்ததாக குற்றம் சாட்டியதால், புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். சட்டையில்லாமல் இருக்கும் மைக்கேல் கிளார்க்கை, அவரது காதலி ஜேட் யார்ப்ரோ பலமுறை கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.

ஜனவரி 10ஆம் தேதியன்று மைக்கேல் கிளார்க், அவரது காதலி ஜேட் யார்ப்ரோ மற்றும் காதலியின் சகோதரர் கார்ல் ஸ்டெஃபனோவிக் மூவரும் நூசாவில் உள்ள கடற்கரையோர உணவகத்தில் உணவருந்தியபோது நிகழ்ந்த வாக்குவாதமானது, பொதுவெளியில் ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாறியுள்ளது. மைக்கேல் கிளார்க்கின் காதலி ஜேட், டிசம்பர் 17 அன்று கிளார்க் அவருடைய முன்னாள் காதலிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை பார்த்ததாகவும், அவர் இன்னும் அவருடைய முன்னால் காதலி பிப் எட்வர்ட்ஸ் உடன் தொடர்பில் இருப்பதாகவும் ஜேட் யார்ப்ரோ குற்றஞ்சாட்டியதாக தெரிகிறது.

நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு கோபமடைந்த ஜேட், கிளார்க்கின் வார்த்தைகளின் மேல் நம்பிக்கை இல்லாமல் அவர் ஒரு விசுவாசமற்றவர் என்றும், துரோகம் செய்துவிட்டதாகவும் கத்திக்கொண்டே எழுந்து வந்துள்ளார்.

பின்னாலே வந்த கிளார்க், ”இது எதுவும் உண்மையல்ல நம்பு, என்னை விட்டு போகாதே என கத்திக்கொண்டே வருகிறார். ஜேட்டின் சகோதரர் மீது கோபமாகி கத்தும் கிளார்க், நீ ஒரு கோழை அவளால் என்னை அடிக்க முடியும், ஹிட் மீ, ஹிட் மீ என அவர் காதலியின் அருகில் செல்கிறார்”. அவரை இந்த அணுகுமுறையை அருகில் எதிர்கொண்ட கிளார்க்கின் காதலி, கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவர் கன்னத்தில் பலமுறை பளார் பளார் என அறைந்துவிட்டு போகிறார்.

அங்கு சுற்றிருக்கும் மக்களில் ஒருவர், இங்கே குழந்தைகள் இருக்கிறார்கள், வெளியே போய் சண்டையிடுங்கள் என்று கூறுகிறார். கிளார்க்கின் மீதும் அவருடைய சொற்களின் மீதும் நம்பிக்கையில்லாத ஜேட், அங்கிருந்து வேகமாக போகிறார்.

அப்போது, “ என் உயிர் மீது சத்தியம் செய்கிறேன்., அது உண்மையல்ல. என் மகளின் உயிர் மீது கூட சத்தியம் செய்கிறேன்.. போகாதே நம்பு..” என்கிறார் கிளார்க். பின்னர் பொதுவெளியில் நடந்த மோசமான நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் கிளார்க்.

கிளார்க் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படி ஒரு கடினமான நேரத்தைக் காண்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, கிளார்க் 2019ல் கைலி கிளார்க் இடமிருந்து விவாகரத்து செய்ததற்காக தலைப்புச் செய்தியானார். அவர் அந்த விவாகரத்திற்கான இழப்பீட்டுத்தொகையாக 300 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது, கிரிக்கெட் உலகில் அதிக விலையுயர்ந்த விவாகரத்தாக அது பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com