”ஆஸ்திரேலியா நாட்டு ஆடுகளங்களில் இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் நிச்சயம் தேவை”- மேத்யூ ஹைடன்

”ஆஸ்திரேலியா நாட்டு ஆடுகளங்களில் இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் நிச்சயம் தேவை”- மேத்யூ ஹைடன்
”ஆஸ்திரேலியா நாட்டு ஆடுகளங்களில் இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் நிச்சயம் தேவை”- மேத்யூ ஹைடன்

டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தை தொலைத்துவிட்டார் என்றும், அவர் கட்டுப்பாடான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூவ் ஹைடன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் உலகக்கோப்பைக்கான அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து இரண்டு விஷயங்களில் இந்திய அணி நிர்வாகத்திடம் தொடர்ச்சியான கேள்விகள் வைக்கப்பட்டன. அது முகமது ஷமி முதன்மையான அணியில் இல்லாமல் போனது மற்றும் மற்றொரு ஆடும் 11 வீரர்களில் யாருக்கு இடம் அளிப்பீர்கள் ரிஷப் பண்டா இல்லை தினேஷ் கார்த்திக்கா என்பதுதான்.

இந்நிலையில் ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டு உலககோப்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து ரிஷப் பண்ட்டா இல்லை தினேஷ் கார்த்திக்கா என்ற கேள்வி இன்னும் அதிகரித்து கொண்டே இருந்தது. ஆடும் அணியில் இடது கை பேட்ஸ்மேன் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் உட்கார வைக்கப்பட்டு ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டதை அடுத்து, அவர் அணிக்கு சிறப்பான பங்களிப்பதால் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ரிஷப் பண்ட் நிறுத்தி வைக்கப்பட்டு தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இரண்டாவது போட்டியில் இருவரையும் விளையாட வைத்தனர். இருப்பினும் 5 பவுலர்களுடன் நிச்சயம் இந்திய அணி ஆடும் 11ஐ உருவாக்காது என்றே நம்பப்படுகிறது. அப்படி 6 பவுலர்கள் தேவை பட்டால் ரிஷப் பண்டிற்கு தான் வாய்ப்பு வழங்கப்படும். இதனால் ரிஷப் பண்டா தினேஷ் கார்த்திக்கா என்ற குழப்பம் நீடித்து கொண்டே வருகிறது.

தற்போது ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் தேர்வு குறித்து பேசியிருக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூவ் ஹைடன், ” என்னைப் பொறுத்தவரை அணியின் தேர்வு ரிஷப் பண்டாகத்தான் இருக்க வேண்டும். டி20 உலகக் கோப்பைக்கு நீங்கள் அவரை அணியில் நிச்சயம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஆஸ்திரேலிய சூழ்நிலையில் விளையாடும்போது. உங்களுக்கு ஆக்ரோசமாகவும் அதிரடியாகவும் அதிகாரம் செலுத்த கூடிய வீரர் வேண்டும். பந்துவீச்சாளர் மற்றும் ஆடுகளத்தின் வேகத்தைப் பயன்படுத்தும் போது தினேஷ் கார்த்திக் ஒரு அற்புதமான வீரர் தான், ஆனால் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் ஒரு பெரிய மைதானம், அங்கு பந்தை மைதானத்தை விட்டு தொலைதூரத்திற்கு அடிக்கக்கூடிய வீரர் இருக்க வேண்டும் ”என்று மேத்யூ ஹைடன் கூறினார்.

மேலும், மைதானத்தில் குறிப்பாக விக்கெட்டின் பக்கங்களை கடந்து வெளியே அடிக்க குறைந்தபட்சம் 3-4 பவர் ஹிட்டிங்க் வீரர்களை அணியில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, அந்த பன்முகத்தன்மை ரிஷப்பிற்கு உள்ளது. அவர் இன்னும் கட்டுப்பாடாக விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன், அவர் நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் தொலைந்துவிட்டார் ”என்று ஹைடன் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com