‘வேண்டாம் என்.ஆர்.சி., என்.பி.ஆர்’ - மைதானத்திற்குள் எதிர்ப்பை வெளிப்படுத்திய ரசிகர்கள்

‘வேண்டாம் என்.ஆர்.சி., என்.பி.ஆர்’ - மைதானத்திற்குள் எதிர்ப்பை வெளிப்படுத்திய ரசிகர்கள்

‘வேண்டாம் என்.ஆர்.சி., என்.பி.ஆர்’ - மைதானத்திற்குள் எதிர்ப்பை வெளிப்படுத்திய ரசிகர்கள்
Published on

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்களில் ஒரு குழுவினர் வேண்டாம் என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் என்ற வாசகத்துடன் கூடிய பனியன் அணிந்திருந்தனர்.

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்ததை தொடர்ந்து, என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள பணிகளை தொடங்கியுள்ளது. அதேபோல், அசாமில் அமல்படுத்தப்பட்ட என்.ஆர்.சி நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றிற்கு எதிராகவும் போராட்டங்கள் பல்வேறு முறைகளில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியை காண வான்கடே மைதானத்திற்கு வந்த ரசிகர்களில் ஒரு குழுவினர், தங்கள் பனியன்களில் உள்ள எழுத்துக்களை இணைக்கும்படி வரிசையாக நின்றும், ‘வேண்டாம் சிஏஏ., என்.ஆர்.சி, வேண்டாம் என்.பி.ஆர்’ என தங்கள் கருத்தினை வெளிப்படுத்தினர். அவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com