விளையாட்டு
”என் தங்கச்சிப்பா”: மர்மத்தை உடைத்தார் ஹார்டிக் பாண்டியா
”என் தங்கச்சிப்பா”: மர்மத்தை உடைத்தார் ஹார்டிக் பாண்டியா
இணையதளத்தில் வைரலான இந்திய அணியை சேர்ந்த ஹார்டிக் பாண்டியாவின் புகைப்படத்திற்கு பதில் கிடைத்தது.
இந்திய அணியின் ஆல் ரவுண்டராக அழைக்கப்படுபவர் ஹார்டிக் பாண்டியா. சமீபத்தில் இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பது போல் புகைப்படத்தை பதிவு செய்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த பாண்டியாவின் தீவிர ரசிகர்கள் அந்த பெண் யார்? என்று பல கேள்விகளை அவரிடம் கேட்டனர். சிலர் அவரின் பெண் தோழி, காதலி என பல வதந்திகளைப் பரப்பி வந்தனர். இதற்கிடையில் பாண்டியா இன்று “மர்மம் தீர்ந்தது.. அவள் என்னுடைய தங்கை” என்று தன் டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். இந்த பதிவை பார்த்த பாண்டியாவின் பெண் ரசிகைகள் பலர் சந்தோஷத்தில் குதித்துள்ளனர்.