அடுத்த 2 டெஸ்ட்டிலும் கே.எல்.ராகுல்.. ஷாக் ஆன ஃபேன்ஸ்! ரோகித், டிராவிட் சொன்ன காரணங்கள்!

அடுத்த 2 டெஸ்ட்டிலும் கே.எல்.ராகுல்.. ஷாக் ஆன ஃபேன்ஸ்! ரோகித், டிராவிட் சொன்ன காரணங்கள்!
அடுத்த 2 டெஸ்ட்டிலும் கே.எல்.ராகுல்.. ஷாக் ஆன ஃபேன்ஸ்! ரோகித், டிராவிட் சொன்ன காரணங்கள்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட பெயர் பட்டியலை அறிவித்துள்ளது, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெற்றுவரும், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின், 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளுக்கான டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம். முன்னதாக முதல் 2 போட்டிகளில் விளையாடும் அணியை மட்டும் தான் அறிவித்திருந்தது. இந்நிலையில் கே.எல்.ராகுல் சொதப்பி வரும் நிலையில், அடுத்த 2 போட்டிகளில் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சர்பராஸ் கான் அல்லது சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்ப்பார்ப்பை எல்லாம் உடைக்கும் வகையில், மீண்டும் கே.எல்.ராகுலையே பேக் செய்ய விரும்புவதாக, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் அறிவித்துள்ளனர். அடுத்த இரண்டு போட்டிகளுக்கான அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கே.எல்.ராகுல் அணியில் இடம்பிடித்துள்ளார். முதல் 2 போட்டிகளில் விளையாடிய அதே அணியுடனே, கடைசி 2 போட்டிகளிலும் விளையாடவிருக்கிறது இந்திய அணி.

’இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினம்” அதனால் நாங்கள் கே.எல்.ராகுலை பேக் செய்கிறோம் - கேப்டன் ரோகித் சர்மா

கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அவரை அணியிலிருந்து டிராப் செய்துவிட்டு, வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கே.எல்.ராகுல் பற்றி பேசியிருக்கும் கேப்டன் ரோகித் சர்மா, “இது போன்ற ஆடுகளங்களில் ரன்களை எடுப்பது கடினமாக ஒன்றாக இருந்தது. இரண்டு அணியினராலும் ரன் குவிப்பது சவாலாக இருந்தது. அதனால் நாங்கள் கே.எல்.ராகுலை பேக் செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.

தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், “நாங்கள் கே.எல் ராகுல் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். இதுபோன்ற காலங்கள் அனைத்து வீரருக்கு வரக்கூடிய ஒன்று தான். நாங்கள் தொடர்ந்து அவரை ஆதரிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அப்படியானால் சுப்மன் கில் போன்ற வீரர்களை ஓய்வுபெற சொல்லிவிடுங்கள்! - ரசிகர்கள் ஆதங்கம்

கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஸ்டேட்மெண்ட் வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்துவருகின்றனர். டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் ஒருவர், “என்ன நடந்தாலும் தொடர்ந்து கேஎல் ராகுலுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என்றால், வாய்ப்பிற்காக காத்திருக்கும் சுப்மன் கில் போன்ற வீரர்கள் ஓய்வுபெற்றுவிடலாம்” என்று கூறியுள்ளார்.

மற்றொருவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் கே.எல்.ராகுலின் பெயரைப் பார்த்ததும் பேச்சில்லாமல் போனது. பேசாமல் ரஞ்சி கோப்பை தொடரை நிறுத்திவிடுங்கள். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை புறக்கணித்து விட்டு, மோசமாக விளையாடி வரும் ஒருவருக்கு வாய்ப்பளிக்கும் கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்கள், அணி நிர்வாகத்தை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து மட்டும் ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த போட்டியில் துணை கேப்டனான ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com