“சொந்த ஊருக்காக விளையாடுவது மகிழ்ச்சி” - ஷிகார் தவான்

“சொந்த ஊருக்காக விளையாடுவது மகிழ்ச்சி” - ஷிகார் தவான்
“சொந்த ஊருக்காக விளையாடுவது மகிழ்ச்சி” - ஷிகார் தவான்

ஐபிஎல் தொடரில் மீண்டும் தனது சொந்த ஊருக்காக விளையாடவுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகார் தவான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறுவதால் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஐபிஎல் போட்டிக்கான தீவிர பயிற்சியில் அனைத்து அணிகளும் ஈடுபட்டுள்ளனர். இம்முறை ‘டெல்லி டேர்டேவில்ஸ்’ அணி ‘டெல்லி கேபிடல்ஸ்’ என்றப் பெயருடன் புதுப் பொளிவுடன் களமிறங்கவுள்ளது. 

இந்நிலையில்‘டெல்லி கேபிடல்ஸ்’ அணியில் விளையாடவுள்ள இந்திய வீரர் ஷிகார் தவான் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “முதலாவது ஐபிஎல் சீசனில் டெல்லி அணிகாக ஐபிஎல் போட்டியில் விளையாடினேன். அதன் பிறகுப் பல்வேறு அணியில் விளையாடி வந்தேன். எனினும் தற்போது மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளேன். அத்துடன் பெரோஸ் ஷா கோட்லா மைத்தானம் தான் எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்த மைதானம். இந்த மைதானத்தின் சூழல் குறித்து எனக்கு நன்றாக தெரியும் என்பதால் நான் நன்றாக விளையாட முயற்சிப்பேன். 

மேலும் இந்தத் தொடரில் இளம் வீரர்களுக்கு இக்கட்டான சூழல்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து கற்றுக்கொடுப்பேன். பொதுவாக ஐபிஎல் போட்டியை வெல்லும் அணி சிறந்த வீரர்களின் கலவை அணியாக இருக்கும். அந்தவகையில் இம்முறை டெல்லி அணியும் நல்ல வீரர்களை கொண்டுள்ளது. அத்துடன் டெல்லி அணியிலுள்ள இந்திய வீரர்கள் இம்முறை நன்றாக விளையாடும் பட்சத்தில் அணி சிறப்பாக செயல்படும். இதனால் இந்த ஐபிஎல் டெல்லி அணிக்கு  நன்றாக அமையும்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com