”2-3 தோல்விகளைப் பற்றி கவலை வேண்டாம்; மீண்டு வாருங்கள்” - கங்குலி நம்பிக்கை

”2-3 தோல்விகளைப் பற்றி கவலை வேண்டாம்; மீண்டு வாருங்கள்” - கங்குலி நம்பிக்கை
”2-3 தோல்விகளைப் பற்றி கவலை வேண்டாம்; மீண்டு வாருங்கள்” - கங்குலி நம்பிக்கை

டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய ஃபார்ம் குறித்து கவலைப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆசியகோப்பையின் தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் வெற்றியை கொண்டு தொடரை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 208 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாமல் படுதோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து இந்திய அணியின் அணித்தேர்வு மீதும், ரோகித் ஷர்மாவின் கேப்டன்சியின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணியின் சமீபத்திய தோல்விகள் குறித்து பேசியிருக்கும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, கடந்த இரண்டு-மூன்று போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கு டி20 போட்டிகளில் மிக நல்ல கிராஃப் உள்ளது. கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் வெற்றியைப் பாருங்கள். அவர் சிறப்பாக அதை செய்து காட்டியுள்ளார். அவரது வெற்றி சதவீதம் 82 சதவீதம். அவர் கிட்டத்தட்ட 35 போட்டிகளில் கேப்டனாக இருந்த நிலையில், 3 இல் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளார். ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் அணியைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். 2 அல்லது 3 தோல்விகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசுகையில், உலகக் கோப்பையில் இந்திய அணியில் விராட் கோலி ஒரு முக்கிய அங்கம் என்றும், தொடர்ந்து அவரது ஃபார்ம் தொடரும் என்று நம்புவதாகவும் கங்குலி கூறினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பையில் சதம் அடித்து கோஹ்லி தனது சத வறட்சியை மிகவும் சாத்தியமில்லாத வகையில் முடித்திருக்கிறார். ரோஹித் ஷர்மா இல்லாத நேரத்தில் பேட்டிங்கைத் தொடங்கிய அவர், 61 பந்துகளில் 122* ரன்கள் எடுத்தது மகிழ்ச்சியை அளித்தது.

மேலும் உலகக் கோப்பைக்கு சில வாரங்களுக்கு முன்பு இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளது. இந்தியா சிறப்பாகச் செயல்படும் என்றும், போட்டிக்கு அவர்கள் போதுமான அளவு தயாராக உள்ளனர் என்றும் நான் நம்புகிறேன். அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com