”மாமிசம் சாப்பிட்டால்தான் உடற்கட்டா?” - ரசிகரின் சைவமா? அசைவமா கேள்விக்கு கோலியின் ரிப்ளை

”மாமிசம் சாப்பிட்டால்தான் உடற்கட்டா?” - ரசிகரின் சைவமா? அசைவமா கேள்விக்கு கோலியின் ரிப்ளை

”மாமிசம் சாப்பிட்டால்தான் உடற்கட்டா?” - ரசிகரின் சைவமா? அசைவமா கேள்விக்கு கோலியின் ரிப்ளை
Published on

தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ள விராட் கோலி, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்திருப்பது சோஷியல் மீடியாவில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், தனது தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நட்சத்திர இந்திய பேட்டரான கோலி டிரெட்மில்லில் ஓடுவதையும், தோள்பட்டை பயிற்சிகளையும் செய்துள்ளார். அவரின் வொர்க் அவுட் வீடியோ கோஹ்லியின் ரசிகர்களை மட்டுமல்லாமல், அவரது சக வீரர்களையும் கவர்ந்த நிலையில், இந்தியாவின் 360டிகிரி பேட்டர் என்று அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ் விராட் கோலியின் வீடியோவில் புலி எமோஜியை பதிவிட்டுள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வில் இருக்கும் விராட் கோலி, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்புகிறார்.

இந்நிலையில் அவரது ஒர்க் அவுட் வீடியோவில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விராட் கோலி பதிலளித்துள்ளது சோஷியல் மீடியாவில் சைவமா? அசைவமா? என்ற பட்டிமன்றத்தையே உருவாக்கியுள்ளது.

ரசிகர் பதிவிட்டுள்ள கமெண்டில், “ஒரு நல்ல உடலமைப்பு மற்றும் தசைகள் இருக்க இறைச்சி சாப்பிடுவது அவசியம் என்று முன்னர் அவர்கள் கூறினார்கள்” என்று அவர் பதிவிட, அதற்கு பதிலளித்திருக்கும் விராட் கோலி, "ஹாஹாஹா உலகின் மிகப்பெரிய கட்டுக்கதை" என்று கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டில், உடல்நலக் காரணங்களுக்காக தனது உணவில் இருந்து இறைச்சியைத் தவிர்க்க விராட் கோலி முடிவு செய்தார். அப்போது அவர் தெரிவித்தது, “எனக்கு கர்ப்பப்பை வாய் முதுகுத்தண்டில் பிரச்சினை இருந்தது, இதன் விளைவாக எனது சுண்டு விரலில் கூச்ச உணர்வு ஏற்பட்டது, இது எனக்கு பேட்டிங் செய்வதை கடினமாக்கியது. இது 2018-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த செஞ்சுரியன் டெஸ்டில் நடந்தது. மேலும், என் வயிற்றில் அமிலம் அதிகமானதால், என் எலும்புகளில் இருந்து கால்சியம் இழக்க ஆரம்பித்தது, இது உண்மையில் முதுகுத்தண்டு பிரச்சினையை ஏற்படுத்தியது. எனவே, நான் இறைச்சியை குறைக்க வேண்டியிருந்தது, இப்போது நான் முன்பை விட நன்றாக உணர்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டில், விராட் கோலி அவர் சாப்பிடும் உண்மையான உணவைப் பகிர்ந்து கொண்டார். அதில் "நிறைய காய்கறிகள், இரண்டு கப் காபி, குயினோவா, நிறைய கீரைகள், தோசைகள் போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் இருந்தன. அதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், கோலி சைவ உணவு உண்பவர் என்று கூறினாலும், அவர் முட்டைகளையும் உட்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலி தற்போது தெரிவித்திருக்கும் இந்த கருத்து வைரலாகியுள்ள நிலையில், ஒரு நல்ல உடலமைப்பை பெற அசைவம் அவசியம் என்று பலரும், இல்லை என்று பலரும் மாறி மாறி பதிவிட்டும், பதிலளித்தும் வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com