“இப்படியே போனால் டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவுதான்” - சூர்யகுமார் குறித்து ஜாஃபர் கவலை!

“இப்படியே போனால் டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவுதான்” - சூர்யகுமார் குறித்து ஜாஃபர் கவலை!
“இப்படியே போனால் டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவுதான்” - சூர்யகுமார் குறித்து ஜாஃபர் கவலை!

டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடுவது குறித்தும், லாங்கர் பார்மேட்களில் வரும்போது சொதப்புவது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்.

டி20 போட்டிகள் மட்டுமில்லாது 2022 டி20 உலகக்கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், அடுத்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் ஒருநாள் போட்டி வடிவத்தில் ஆடியிருக்கும் அவர், சோபிக்க முடியாமல் ஒரே மாதிரியான டிஸ்மிசலில் அவுட்டாகி வெளியேறினார். குறுகிய வடிவ போட்டிகளில் பெரிதாக சோபிக்க முடிந்த அவரால், நீண்ட நேர கிரிக்கெட் வடிவமாக பார்க்கப்படும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சோபிக்க முடியாமல் போகுமோ என்னும் கேள்வி எழ ஆரம்பித்து இருக்கிறது.

ஏனெனில் எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்திய அணி தற்போதிலிருந்தே தயாராக வேண்டிய இடத்தில் இருக்கிறது. கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிவரை பிளேயிங் லெவனை உறுதி செய்யமுடியாமல் தடுமாறிய இந்திய அணி, அரையிறுதிப்போட்டியில் படுதோல்வி அடைந்து திரும்பியது. இந்நிலையில் எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு ஆடும் 11 வீரர்களுக்கான தேர்வில் உறுதியாக இருக்க வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது இந்திய அணி.

நியூசிலாந்து எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் ஸ்லிப் பீல்டரிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேறினார் சூரியகுமார் யாதவ், ஆனால் இரண்டாவது போட்டியில் டி20யைப்போல் அதிரடியாக ஆடிய அவர் 34 ரன்கள் எடுத்தார், மீண்டும் 3ஆவது போட்டியில் ஸ்லிப் பீல்டரிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் வெளியேறினார் சூரியகுமார் யாதவ்.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவின் ஒரேமாதிரியான ஆட்டமிழப்பு குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர், ”ஆம் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஸ்லிப் பீல்டரிடம் கேட்ச் கொடுத்து அதே பாணியில் அவுட் ஆனார். டி20 கிரிக்கெட்டில் ஸ்லிப் பீல்டர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை, அதனால் அவர் பிழைத்துகொள்கிறார். ஆனால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை விரிவடையும் போது, அவர் இப்படி விளையாடினால் எப்படி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று மக்கள் இப்போது பேசுகிறார்கள், தொடர்ந்து அனைத்து வடிவங்களிலும் அவர் சிறப்பாக விளையாட அதற்கேற்றவாறு அவரை அவர் மேம்படுத்த வேண்டும், ”என்று கூறினார்.

மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாட அந்தந்த வடிவங்களுக்கு ஏற்றவாறு தன்னை மேம்படுத்திகொள்ள வேண்டியது அவசியமாகிறது, அதை சூரியகுமார் யாதவ் செய்தால் ஒருநாள் போட்டிகளிலும் அவர் அதிக சதங்களை அடிக்கும் நாட்கள் குறைவாகவே இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com