ஆசியக் கோப்பை தொடரில், பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசியது எப்படி என்பது பற்றி ரவீந்திர ஜடேஜா விளக்கம் அளித்தார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சூப்பர் 4 சுற் றுப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்திய அணியில் காயமடைந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக, சுழற்பந்து வீச் சாளர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் 173 ரன்னில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஷ்வர்குமார், பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் ஆடிய இந்திய அணி, ரோகித் சர்மாவின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார் ஜடேஜா. இவர், கடைசியாக கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்த ஒரு நாள் போட்டியில் பங்கேற்றிருந்தார். பிறகு அவரை ஒரு நாள் போட்டியில் சேர்க்கவில்லை. டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே அழைத்தனர்.
இந்நிலையில் ஒரு நாள் போட்டியில் மீண்டும் தன்னை நிரூபித்துள்ள ஜடேஜா, நான்கு விக்கெட் வீழ்த்தியது பற்றி கூறும்போது, ’ எனது நினைவில் இந்தப் போட்டி எப்போதும் இருக்கும். ஏனென்றால் 480 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் அணிக்குத் திரும்பி இருக்கிறேன். விக்கெட் வீழ்த்தி இருக்கிறேன். டெஸ்ட் போட்டியில் விளையாடினாலும் கடந்த சில தொடர்கள் வெளிநாட்டில் நடந்தது. அதனால் அதிலும் எனக்குத் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கவில்லை.
Read Also -> நிரூபித்தார் ஜடேஜா, இந்திய அணி அபார வெற்றி!
அதனால், வாய்ப்புக் கிடைக்கும்போது கண்டிப்பாக, சிறப்பாக செயல்பட உறுதி எடுத்துக்கொண்டேன். அதன்படி ஆட்டத்தில் அதிகமாக கவனம் செலுத்தினேன். நினைத்தபடி விக்கெட்டை வீழ்த்தினேன். இன்று (நேற்று) விளையாடியதை போல வாய்ப்பு கிடைக்கும் போட்டிகளில் எல்லாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே என் ஆசை’ என்றார்.