“வலையில் நான் செய்யும் கடின பயிற்சியே மைதானத்தில் எதிரொலிக்கிறது” - ஹர்திக் பாண்ட்யா

“வலையில் நான் செய்யும் கடின பயிற்சியே மைதானத்தில் எதிரொலிக்கிறது” - ஹர்திக் பாண்ட்யா
“வலையில் நான் செய்யும் கடின பயிற்சியே மைதானத்தில் எதிரொலிக்கிறது” - ஹர்திக் பாண்ட்யா

தான் வலைக்குள் செய்யும் கடின பயிற்சியே மைதானத்தில் விளையாடும் போது சிறந்த ஆட்டமாக எதிரொலிக்கிறது என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 34வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ரோகித் ஷர்மா 30 (22), டி காக் 35 (27), குருனல் பாண்ட்யா 37 (26) ரன்கள் எடுத்தனர். இறுதி நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 15 பந்துகளில் 32 ரன்களை விளாசினார்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும், 20 ஓவர்களில் இலக்கை எட்டமுடியாமல் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி எளிதான வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியில் ராகுல் சஹார் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அத்துடன் குருனல் பாண்ட்யா, மலிங்கா ஆகியோருடன், ஹர்திக் பாண்ட்யாவும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இவர்களில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் பேசிய ஹர்திக், “நான் பேட்டிங் செய்யும் போது ஒவ்வொரு முறையும், நான் இதுவரை எந்த பந்தையும் சிறப்பாக அடிக்கவில்லை என எனக்குள் சொல்லிக்கொள்வேன். அத்துடன் நான் வலைக்குள் மேற்கொள்ளும் கடினப்பயிற்சி மைதானத்தில் எதிரொலிக்கிறது. நான் இறுதிக்கட்டத்திலும் அடிப்படை விதிகளை கடைபிடிப்பவன். நான் நம் திறனை நம்பினால், பந்துவீச்சாளர்கள் தவறும்போது கட்டாயம் ஒரு ஹிட் அடிக்கலாம். நான் விளையாட இன்னும் 5 போட்டிகள் இருக்கிறது. அதன்பின்னர் ப்ளே ஆஃப் சுற்று வந்துவிடும். இந்த தொடர் முழுவதுமே நான் இதேபோன்று விளையாடுவேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com