“எனக்காக இன்னும் ஒரு உலகக் கோப்பை இருக்கிறது” - மனம் திறந்த உத்தப்பா

“எனக்காக இன்னும் ஒரு உலகக் கோப்பை இருக்கிறது” - மனம் திறந்த உத்தப்பா

“எனக்காக இன்னும் ஒரு உலகக் கோப்பை இருக்கிறது” - மனம் திறந்த உத்தப்பா
Published on

தனக்காக இன்னும் ஒரு உலகக் கோப்பை தொடர் இருப்பதாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் என்ற பெயரை குறுகிய காலத்திலேயே பெற்றவர் ராபின் உத்தப்பா. குறிப்பாக டி20 போட்டிகளில் சில பந்துகளை மட்டுமே சந்தித்தாலும் பவுண்டரிகளை விளாசும் நபராக இருந்தார். ஆனால் நீண்ட நாட்கள் இவர் இந்திய அணியில் தாக்குப்பிடிக்கவில்லை.

வீரர்களுக்கு இடையேயான பேட்டிங் போட்டியில், அணியிலிருந்து வெளியேறினார் ராபின் உத்தப்பா. 2006ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைத்த ராபின், 2015ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டிக்குப் பின்னர் இன்னும் எந்தச் சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளில் அவர் களமாடி வருகிறார்.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் தனது விருப்பம் தொடர்பாக ராபின் உத்தப்பா மனம் திறந்துள்ளார். இ.எஸ்.பி.என் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “தற்போது நான் களமாட வேண்டும். எனக்குள் இன்னும் ஒரு நெருப்பு எரிந்துகொண்டு தான் இருக்கிறது. நான் உண்மையிலே விளையாட வேண்டும் மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். எனக்காக ஒரு உலகக் கோப்பை (2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை) இன்னும் இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன். எனவே தான் இன்னும் முயன்று கொண்டிருக்கிறேன். குறிப்பாக, டி20 தொடரில் பங்கேற்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com