தோனியின் ரன் அவுட் குறித்த ஐசிசியின் டெர்மினேட்டர் வீடியோ - கடுப்பான ரசிகர்கள்

தோனியின் ரன் அவுட் குறித்த ஐசிசியின் டெர்மினேட்டர் வீடியோ - கடுப்பான ரசிகர்கள்

தோனியின் ரன் அவுட் குறித்த ஐசிசியின் டெர்மினேட்டர் வீடியோ - கடுப்பான ரசிகர்கள்
Published on

உலகக் கோப்பையில் தோனியின் ரன் அவுட் தொடர்பாக ஐசிசி வெளியிட்ட டெர்மினேட்டர் வீடியோவுக்கு ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய விளையடிய இந்திய அணிக்கு ரோகித், விராட், ராகுல் தலா ஒரு ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். 

92 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜாவின் பார்ட்னர்ஷிப் நம்பிக்கை அளித்தனர். இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றது. ஆனால், ஜடேஜா 77 ரன்களில் 48வது ஓவரில் ஆட்டமிழக்க, இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக தோனி களத்தில் இருந்தார். 49வது ஓவரில் முதல் பந்திலே தோனி சிக்ஸர் அடித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால், மூன்றாவது பந்தில் இரண்டாவது ரன் ஓட முற்பட்ட போது குப்திலின் அற்புதமான த்ரோவால் நூலிழையில் ரன் அவுட் ஆனார். ஆகவே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியில் மூழ்கினர். இந்திய அணியின் ஒரே நம்பிக்கையும் தகர்ந்தது. ரன் அவுட் போது லெக் அம்பயரின் ரியாக்‌ஷனை பார்த்தாலே தெரிந்திருந்திருக்கும். அவரே அவ்வளவு அதிர்ச்சி அடைந்தார்.

ஒருவழியாக இந்திய ரசிகர்கள் தோல்வியை மறக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஐசிசி தோனி ரன் அவுட் தொடர்பாக வீடியோ ஒன்றினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், டெர்மினேட்டர் படத்தில் வருவது போல், குப்தில் நன்றாக குறிபார்த்து பந்தால் அடிப்பது போல் அந்த வீடியோ இருக்கிறது. அவர் பந்தினை எடுக்கும் போதே வீடியோவின் ஒரு பக்கத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்ற வார்த்தைகள் இருக்கிறது. ஸ்டம்பை குறிபார்த்து அடித்தவுடன் அது வெடிகுண்டு வெடிப்பதை போல் உள்ளது. 

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த வீடியோ இந்திய ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ஏற்கெனவே தோனியின் ரன் அவுட்டால் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம் என்ற வருத்தத்தில் இருக்கையில் ஐசிசி இப்படியொரு வீடியோவை வெளியிட்டு மீண்டும்  அதனை ஞாபகப்படுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், மற்றொரு ரசிகர் ஒருவர் வெளிப்புற எல்லைப் பகுதியில் 6 வீரர்கள் பீல்டிங் செய்தது ஐசிசி கண்களுக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எழுப்பினர். 

மேலும், இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியதில் ஐசிசி மகிழ்ச்சி அடைகிறதா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com