\
“கோப்பையை இங்கிலாந்து வென்றிருக்கலாம்.. இதயங்களை வென்றது நியூசிலாந்துதான்” உருகும் இந்திய ரசிகர்கள்

“கோப்பையை இங்கிலாந்து வென்றிருக்கலாம்.. இதயங்களை வென்றது நியூசிலாந்துதான்” உருகும் இந்திய ரசிகர்கள்

“கோப்பையை இங்கிலாந்து வென்றிருக்கலாம்.. இதயங்களை வென்றது நியூசிலாந்துதான்” உருகும் இந்திய ரசிகர்கள்
Published on

இங்கிலாந்து அணி கோப்பையை வென்ற போதிலும், நியூசிலாந்து அணியே கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றது நியூசிலாந்துதான் என்று இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் உருக்கமாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

லண்டனில் உள்ள லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டயில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதுவரை பார்த்திராத அளவிற்கு இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி அவ்வளவு பரபரப்பாக நடைபெற்றது. போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவர் வரை சென்றது. அத்துடன் முடியாமல், இருவரும் தலா 15 ரன்கள் அடிக்க சூப்பர் ஓவரும் டையில் முடிவடைந்தது. ஐசிசி விதிகளில் அதிக  பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து முதன்முறையாக கோப்பையை வென்றது.

இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி இருந்தாலும் இறுதிவரை போராட்ட குணத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தது. ஐசிசியின் அந்த விதிகுறித்து தற்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவொருபுறம் இருக்க நியூசிலாந்து அணிக்கு ஆதரவாக இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com