\
“உங்கள் ஈகோவை நீக்குங்கள்” - வைரலான விராட் படித்த புத்தகம்

“உங்கள் ஈகோவை நீக்குங்கள்” - வைரலான விராட் படித்த புத்தகம்

“உங்கள் ஈகோவை நீக்குங்கள்” - வைரலான விராட் படித்த புத்தகம்
Published on

இந்திய கேப்டன் விராட் கோலி ‘உங்கள் ஈகோவை நீக்குங்கள்’ என்ற புத்தகத்தை படிக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்தப் பயணத்தில் கோலி தலைமையிலான அணி ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரை வென்றுள்ளது. தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி அண்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒருநாள் தொடரில் தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்த விராட் கோலி, டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 9 (12) ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் விராட் கோலியே டெஸ்ட் தொடரிலும் வைரல் டாப்பிக்காக ஆகியுள்ளார். 

அதற்கு காரணம் வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உட்கார்ந்து அவர் படித்த ‘உங்கள் ஈகோவை நீக்குங்கள்’ என்ற புத்தகம். ஏனென்றால் இந்திய அணியில் ரோகித் ஷர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே ஈகோ போர் சென்றுகொண்டிருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே தோனிக்கும், கோலிக்கும் இடையே இப்படி ஒரு ஈகோ போர் இருந்ததாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் கோலி இப்படி ஒரு புத்தக்கத்தை படிப்பது பேசு பொருளாகியுள்ளது. அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், தற்போது தான் கோலி சரியான புத்தகத்தை படிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com